பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது. 2 பேர் தலைமறைவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஜூலை, 2025

பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது. 2 பேர் தலைமறைவு!

பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது. 2 பேர் தலைமறைவு!


பேரணாம்பட்டு, ஜூலை. 10 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது 2 பேர் தலை மறைவு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த வர்கள் முத்தரசன் (வயது32) அதே கிராம த்தை சேர்ந்த பொன்மணி, விக்னேஷ் ஆகிய மூவரும் நேற்று முன் தினம் இரவு மது போதையில் பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த பெண் காவலர் கீதா என்பவரிடம் எங்களை எங்கள் ஊரில் உள்ளவர்கள் சிலர் தாக்கி விட்டனர் அவர்களை கைது செய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பெண் காவலர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அருகே உள்ள சப் ஸ்டேஷன் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர் சிறிது நேரத்தில் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வந்துவிடு வார் சிறிது நேரம் காத்திருங் கள் என்று கூறியுள்ளார் அதனை ஏற்காத போதை ஆசாமிகள் பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கமாக பேசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் இது குறித்து பெண் காவலர் கீதா கொடுத்த புகாரின் பேரில் பேரணாம் பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற் கொண்ட வந்த நிலையில் நேற்று முத்தர சன் (வயது32) என்பவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழக சிறப்பு செய்தியாளர் விஜயகுமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad