காரமடை அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு இளம் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்!
கோவை மாவட்டம் காரமடை அருகே ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் 23,பால் வியாபாரி திருமணம் ஆகாதவர் தனது தந்தை, தாய் ,தங்கையுடன், வசித்து வருகிறார் தங்கைக்கு திருமணம் ஆகி அண்மையில் குழந்தை பிறந்தது. இதனால் தங்கை அவரது வீட்டில் தங்கி உள்ளார் இதனிடையே இடம் பற்றாக்குறை காரணமாக சஞ்சய் குமார் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார் அங்கு கடந்த 7ஆம் தேதி இரவு தூங்க சென்றார் அதிகாலை அவரது அம்மா சஞ்சய் குமாரை எழுப்ப சென்ற போது சஞ்சய் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் தகவல் அறிந்து வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலையை செய்த கோவையைச் சேர்ந்த தொழிலாளி காரமடையச் சேர்ந்த கீர்த்தனா 22 வயது தனியார் பள்ளி ஆசிரியர் என தெரிய வந்தது. இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக