குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களு க்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களு க்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது!

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களு க்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது!
 குடியாத்தம் , ஜுலை 27 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்க ளுக்கும் செல் போன் மூலம் கஞ்சா சப் ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட் டனர். 
குடியாத்தம் நகரில் பள்ளி, இளைஞர்களுக்கும் சில கல்லூரி மாணவர்களுக்கும், கஞ்சா சப்ளை செய்வதாகவும், செல்போன் மூலம் தகவல் அளித்தால் நேரில் சென்று கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்து வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.மாவட்ட காவல் கண்காணிப்பா ளர்.மயில்வாகனன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்ப டையினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டின் தனிப்படையினர் இணைந்து குடியாத்தத்தில் கஞ்சா விற்பனை செய்வோரை தேடி வந்தனர்.நேற்று மாலை தனிப்படையினர் குடியாத்தம் அரசு கல்லூரி பின்பக்கம் உள்ள பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஒரு காருடன் 2பேர் நின்றிருந் தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இருவரும் குடியாத்தம் தரணம் பேட்டை ஆலியார் தெரு அமீன் மகன் பாசில் (வயது 34), பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு பகுதி யைச் சேர்ந்த ஆசத்கான் மகன் சல்மான்கான் (ா20) என்றும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பொட்டலமாக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா வேண்டுமென கேட்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பாசில், சல்மான்கானை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 190. கிராம் கஞ்சா மற்றும் சொகுசு காரர்களை பறிமுதல் செய்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad