தேசிய நெடுஞ்சாலை அருகே மதுபான கடை வாகன ஓட்டிகள் அவதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கோரிக்கை!
வேலூர் ,ஜூலை 29-
வேலூர் மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட
செயலாளர் வினோத் கண்ணா மாவட்ட ஆட்சியரிடம் மனு வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் மதுபான கடை உள்ளது. கடையில் மது அருந்த செல்ப வர்கள் மற்றும் மது வாங்க செல்பவர்கள் சர்வீஸ் சாலையில் தங்களது வாகனங் களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்ற னர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மது பான கடைகளை அமைக்க கூடாது என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. கோர்ட்டு உத்தரவை மீறி மதுபான கடை உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை போக்க மதுபான கடையை அகற்றி வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக