தேவாலா பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்படும் PRCC - தார் கலவை ஆலையால் போக்கர் காலணி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் 28.07.2025 அதிகாலை சுமார் 11 மணியளவில் PRCC - தார் கலவை ஆலையில் அளவுக்கு அதிகமாக மலை போல் குவிக்கப்பட்டுள்ள ஜல்லி கற்கள் பாரம் தாங்காமல் தடுப்புச்சுவர் உடைந்து அருகில் வசிக்கக்கூடிய வீடுகளின் மீது தடுப்புச்சுவர் விழுந்துள்ளது இதனால் அருகிலிருந்த பல வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன.
நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை
PRCC - தார் கலவை ஆலையால் மேலும் பல பாதிப்புகள் வரக்கூடும் என இப்பகுதி மக்கள் அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் உள்ளனர்
எனவே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமான PRCC தார் கலவை ஆலை உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் PRCC ஆலை எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக