வார்டு கவுன்சிலர் கணவர் ஆஸ்பத் திரியில் அனுமதி காமராஜர் நகர் 34வது வார்டு கவுன்சிலரை தாக்குதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

வார்டு கவுன்சிலர் கணவர் ஆஸ்பத் திரியில் அனுமதி காமராஜர் நகர் 34வது வார்டு கவுன்சிலரை தாக்குதல் !

வார்டு கவுன்சிலர் கணவர் ஆஸ்பத் திரியில் அனுமதி காமராஜர் நகர் 34வது வார்டு கவுன்சிலரை தாக்குதல் !
திருப்பத்தூர், ஜுலை 3 -

தகாத வார்த்தைகளால் பேசி  கணவரை தாக்குதல்! பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதி யில் 34-வது வார்டு பகுதியில் 40 ஆண்டு களாக அங்கன்வாடி கட்டிடம், நியாய விலை கடை,பொதுமக்கள் பொதுகழிப் பிடம் செயல்பட்டு வந்த நிலையில் கட்டிடம் மிகவும் பழமையாக உள்ளதால் தற்போது நியாயவிலைகடை சி.கே.சி நகர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் அப்பகுதிமக்கள் பழமையான கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையிலபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பி னர் பூமிபூஜை செய்து புதிய நியாய
விலை கடை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம்  மற்றும் பொதுக் கழிப்பிடம்
கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதி கவுன்சிலர் சுகுணா இன்று பணி  நடைபெறும் இடத்தில் பார்வையிட சென்றபோது அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சம்பத், விஜயன் மற்றும் நிவேஷ்குமார் ஆகிய மூன்று பேர் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது கவுன்சிலர் சுகுணாவின் கணவரான ரமேஷ் என்பவர் எதற்காக தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் படுகாயம் ஏற்பட்ட ரமேஷ் திருப்பத் தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இது தொடர் பாக திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad