தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலத் தாழ்விய கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை , ஜுலை 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங் களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே ஆர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், ரகு, குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வட்டார செயலாளர் கே மோகன் அனை வரையும் வரவேற்றார்.இதில் கோரிக்கை விளக்க உரை மாவட்ட செயலாளர் செ. சரவணன் , பங்கேற்று சிறப்புரை ஆற்றி னார் அவர் பேசியதாவது:-
தொடக்கக் கல்வித் துறையில் கண்துடைப்பாக 2025 2006 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெய ரில் விதிகளுக்கு புறம்பாக சட்ட விரோத மாக மாறுதல் ஆணைகளை நாள்தோறும் வழங்கி வரும் தொடக்க கல்வி துறையை வன்மையாக கண்டிக்கிறோம், மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை உடனே ரத்து செய்,போன்ற பல்வேறு கோழி கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன உரையா ற்றினார்.மாவட்ட பொருளாளர் மின்னி செலினா நன்றி உரையாற்றினார் இதில் ஏராளமான ஆரம்பப் பள்ளி பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக