வேலூர் மாவட்டம் ஊரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

வேலூர் மாவட்டம் ஊரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம் ஊரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு  நிகழ்ச்சி!
வேலூர் , ஜுலை 3 -

வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப் பாளர்    N. மதிவாணன்  உத்தரவுப்படி வேலூர் மாவட்ட சைபர் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  K. அண்ணாதுரை  வழிகாட்டுதலின் படியும், நேற்று  02.07.2025 -ஆம் தேதி  மதியம் 12.00 மணிக்கு வேலூரில் உள்ள  ஊரிசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில்  திரளான மாணவர்கள் பங்குபெற்றனர். அதில் சைபர் கிரைம்  பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அவற்றி லிருந்து பாதுகாத்து கொள்ளும் வழி முறைகள் பற்றியும்   காவல் ஆய்வாளர்  ரஜினி காந்த் மற்றும் சைபர் கிரைம் காவல் ஆளிநர்கள்  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இவர்களுக்கு இலவச உதவி   எண்ணான 1930  மற்றும் இணையதளம் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து, அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad