பேரணாம்பட்டு அருகே மணல் கடத்தலை தடுத்தவருக்கு மண்வெட்டியால் வெட்டு 3 வாலிபர்கள் கைது!
பேரணாம்பட்டு, ஜூலை17 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மணல் கடத்தலை தடுத்தவருக்கு மண்வெட்டியால் வெட்டு 3 வாலிபர்கள் கைது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி எம். வி. குப்பம் காலணி யை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார் (வயது42) அதே பகுதியை சேர்ந்த சந்துரு (வயது24) சூர்யா (வயது22) சரண்
(வயது20) இவர்கள் மூவரும் பாலாற்றில் இருந்து தொடர்ந்து இருசக்கர வாகனங் களில் மூட்டை மூட்டையாக மணலை செந்தில்குமாரின் விவசாய நிலம் வழி யாக கடத்தி சென்றுள்ளனர் அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் செந்தில்குமார் தடுத்து நிறுத்தி எச்சரித் துள்ளார் இதில் ஆத்திரமடைந்த சந்துரு தான் வைத்திருந்த மண்வெட்டியால் செந்தில்குமாரின் முகத்தில் வெட்டி யுள்ளார் இதில் பலத்த இரத்த காய மடைந்த செந்தில்குமாரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியா த்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பேரணா ம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக் மாங்கதன் உத்தரவின் பெயரில் மேல்பட்டி சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்கு பதிந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் ஜான் விஜயகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக