வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக ஏ. மயில்வாகனன் பொறுப்பேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக ஏ. மயில்வாகனன் பொறுப்பேற்பு!

வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக ஏ. மயில்வாகனன் பொறுப்பேற்பு! 
வேலூர் , ஜுலை 17 -

காவல்துறையில் புதன்கிழமை  குறைத தீர்வு நாள் கூட்டம் எஸ்.பி. ஏ.மயில்வா கனன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல்துறையில் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத் தில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.மயில்வாகனன் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட எஸ்.பி. பொதுமக்களை நேரில் சந்தித்து கனிவுடன் குறைகளை கேட்ட றிந்து மொத்தம் 25 மனுக்களை பெற்றார். 16.07.2025-ம் தேதி வேலூர் மாவட்டத் திற்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு இரா ணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் எஸ்.பி. யாக பணியாற்றியவர் என்பது குறிப்பி டத்தக்கது. இவருக்கு மாவட்ட அளவி லான அனைத்து காவல்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். புகார் தாரர்களின் மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித் தார். இக்கூட்டத்தின் போது காவல்  துணை கண்காணிப்பாளர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்) சந்திரதாசன், காவல் அலுவலக அலுவலர்கள் மற்றும் காவல் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad