சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை மூன்று கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!
வேலூர் , ஜூலை 27 -
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன், இ.கா.ப,. அவர்கள், பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 26.07. 2025 -ம் தேதி, வேலூர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்திக் கொண்டு வந்த 3 Kg கஞ்சா பறிமுதல் செய்து, எதிரி அலெக்சாண்டர் வ/ 31, த/பெ அருளப்பன், திருவண்ணா மலை என்பவர் கைது செய்து எதிரில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக் கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள் ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக