வேலூர் அடுத்த கீழ்மொனூர் ஊராட்சி யில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!
வேலூர் , ஜுலை 27
வேலூர் மாவட்டம், வேலூர் ஒன்றியம், கீழ்மொனூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் லதா பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட், உமா, வட்டாட்சியர் ஜெகதீசன், ஒன்றியக் குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் இம்முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் ராமலிங்கம் திவாகர் நல்ல தம்பி, கதிரவன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார்களை பதிவேற்றம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக