அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் அமைந்திருக்கும் அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் நமது எமரால்டு பகுதியில் உள்ள அவலாஞ்சி அணை தனது முழுக்க கொள்ளளவை எட்டியுள்ளது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. கரையோர மக்களின் பாதுகாப்பு நலன் கோரி அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் மேலும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக