வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி த்துசாமி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி த்துசாமி



ஈரோடு: மரப்பாலம் ஜீவானந்தம் வீதியில் வடிகால் அமைக்கும் பணிக்கான பணியை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.


அமைச்சர் முத்துசாமி பேட்டி:


படிப்படியாக மதுக்கடைகளை குறைத்துக்கொண்டு வருகிறோம். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறவைக்க வேண்டும் என்பது தான் அரசின் அக்கறையாக உள்ளது. ஏற்கனவே மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கப்படாமல் வேறு இடத்திற்கு மாற்றப்படாமல் இருக்க அக்கறையாக இருக்கிறோம். படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.



ஒரேயடியாக டாஸ்மாக் கடைகளை


நிறுத்த வேண்டும் என எண்ணம்


வந்தாலும் அப்படி நிறுத்தினால்


வேறு இடத்தை நோக்கி செல்வார்கள்,


தவறான வியாபாரம் வந்துவிடும்.


இதையும் போலன்ஸ் செய்து தடுக்க


வேண்டிய கட்டாயம் உள்ளது.


வேறு மாநிலத்தில் இருந்து இங்கு


வந்துவிடக்கூடாது. இதனை


அனைவரும் புரிந்துகொள்வார்கள்.


ஆனால் இதனை மாற்ற வேண்டும்,


படிப்படியாக குறைக்க வேண்டும்


என்பது தான் அரசின் நோக்கம்.


ஆனால் இதை செய்யும்போது


பின்விளைவுகள் இல்லாமல்

பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் அரசிற்கு உள்ளது. 210 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு கடந்த எம்.பி. தேர்தலிலும் அப்படித்தான் சொன்னார். 40 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என விமர்சித்தார்.



ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad