அனைககட்டு , ஜுலை 29 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில்மத்திய அரசால் புவிசார் குறியீடு பெற்ற ருசி மிகுந்த ஒடுக்கத்தூர் கொய்யாவுக்கு இன்றைய விலையிலிருந்து கொள்முதல் விலையை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க கொய்யா விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை..!!கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதத்திற்கும் மேல் மகசூல் குறைவு என கொய்யா விவசாயிகள் வேதனை!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர், ஆலங்காயம் பகுதிகளில் விவசாயிகள் அதிகம் கொய்யா செடிகள் பயிர் செய்து வருகின்றனர். அதிகவிளை ச்சல் மற்றும் ஆஹா ருசியோ ருசி என்ற அளவில் இப்பகுதியில் கொய்யாவை விளைவித்து தமிழ்நாட்டிற்கு பெருமை யை சேர்த்துள்ளதால், மத்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கியுள்ளது. இதில் சிவப்பு ஹைபிரிட், அலகாபாத், சிவப்பு கொய்யா மற்றும் நாட்டு கொய் யா என பல்வேறு வகைகளில் கொய் யாவை அதிகம் விளைவித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதன் ருசியோ சொல்ல முடியாத அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொய்யா வின் மகசூல் 30 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேத னை தெரிவித்து வருகின்றனர். இன் றைய கொய்யாவின் விலையிலிருந்து, கொய்யாவின் கொள்முதல் விலைகளை 50சதவீதமாக விலையை உயர்த்தி விலை நிர்ணயித்து வழங்க வேண்டியும், கொய் யா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டியும் தமிழக அரசுக்கு கொய்யா விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக