காயாமொழியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - ஏராளமான மக்கள் திரண்டு மனு அளித்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

காயாமொழியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - ஏராளமான மக்கள் திரண்டு மனு அளித்தனர்.

காயாமொழியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். நகராட்சி துணை தலைவர் செங்குழி ஏ. பி. ரமேஷ் தொடங்கி வைத்தார். ஏராளமான மக்கள் திரண்டு மனு அளித்தனர் .

தமிழக அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் முகாம் நடைபெறும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிலையில் திருச்செந்தூர் ஒன்றியம் காயாமொழி பள்ளிபத்து பஞ்சாயத்து உட்பட்ட பொதுமக்களுக்கள் பயன்பெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் காயாமொழியில் இன்று நடைபெற்றது. முகாமினை திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான செங்குழி ஏ பி ரமேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் நாகராஜன், 

திருச்செந்தூர் பி டி ஓ பழனிச்சாமி, காயாமொழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி,பள்ளிப்பத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவி, துணைச் செயலாளர்கள் வன செல்வி, சசிகுமார், கஸ்பா செயலாளர் பத்மநாபன், தோப்பூர் சுரேஷ், சூழல் அணி நகர அமைப்பாளர் பைரவா சுரேஷ், கார்த்திக், துணை அமைப்பாளர் முத்துக்கருப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad