தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு!
ராணிப்பேட்டை , ஜுலை 29 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டறையில் திங்கள் கிழமை மனுநீதினால் முகாமில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி தீனன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர் களை சந்தித்து அரசு அனுமதி பெற்ற இடத்தில் மணல் குவாரி விரைவில் திறக்க கோரியும் எம் சாண்ட் ஜல்லி கல்குவாரிகளில் நடைபெறும் முறை கேட்டை சரி செய்யக்கோரி மனு அளித்தனர்.கடந்த இரண்டு ஆண்டு களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வந்த அரசு மணல் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளாக லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுகி றோம் தற்போது ராணிப்பேட்டை மாவட் டம் சக்கரமல்லூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தாக பத்திரிகை செய்தியில் வெளியிட்டி ருந்தனர் இதனால் வரை குவாரி திறக்கப் படவில்லை எங்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் விசாரித்ததில் பொதுப்பணி த்துறையில் (CTE கான்சென்ட் to Establish )அனுமதி பெற்றுள்ளதாகவும் அனுமதி க்கு காத்திருப்பதாக தெரிகிறது. எனவே அம்மா அவர்கள் அனுமதி அளித்து விரைவில் மணல் குவாரி திறக்கவும் தங்கள் மாவட்டத்தில் எங்கே வரும் கல் குவாரி கி ரஷர் களில் பணம் பெற்றுக் கொண்டு தரப்படுகிற கனிமங்களுக்கு முழுவதுமாக ஆன்லைன் ரசிது வழங் காமல் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு ஆன்லைன் வசதிகள் வழங்கினார்கள். இதனால் தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் லாரிகள் மீது மட்டும் குற்ற வழக்கு பதிவு செய்கிறார்கள். இதனால் எங்கள் லாரி தொழில் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது எனவே திருட்டு கனிமத்தை உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யும் கல் குவாரி கிரஷர்கள் மீது முதல் குற்றவாளி யாக வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் இவ்வாறு மனுவில் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சி யில் 100ட்டுக்கும் மேற்பட்ட லாரி உரிமை யாளர்கள் பங்கேற்று இருந்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக