அரசு பள்ளியில் நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம். மாணவன் செல்வ சதீசுக்கு வீட்டிற்கு நேரில் சென்று அதிமுக நிர்வாகிகள் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

அரசு பள்ளியில் நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம். மாணவன் செல்வ சதீசுக்கு வீட்டிற்கு நேரில் சென்று அதிமுக நிர்வாகிகள் பாராட்டு.

அரசு பள்ளியில் நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம். மாணவன் செல்வ சதீசுக்கு வீட்டிற்கு நேரில் சென்று அதிமுக நிர்வாகிகள் பாராட்டு. 
              
திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் செல்வ சதீஷ், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தமிழக அளவில் 60-வது இடம் பிடித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மாணவன் செல்வ சதீசை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் மாணவனின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் வழிகாட்டுதலின்படி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன்,நகர அதிமுக செயலாளர் மகேந்திரன், 

மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, பழக்கடை திருப்பதி, ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் டாக்டர் என் சுரேஷ் பூத் கமிட்டி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad