அகில இந்திய கராத்தே போட்டி புதுச்சேரி மாநிலம் வில்லியநல்லூரில் உள்ள ஆச்சார்யா கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பெறாக் ஒக்கினவா கோஜி ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சென்சாய். வி. ரெங்கநாதன்தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றிபெற்றனர். இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர். இப் போட்டிகள் கட்டாமற்றும் சண்டைப் பிரிவுகளில் நடைபெற்றது. சண்டை பிரிவில் பி.அகிலேஷ், ஆர்.முகேஷ், ஏ.லித்திக், எஸ்.கெளதம்ராஜ், டி.நிறைமதியன், ஆர்.கிரீத்தீஷ் ஆகியோர் முதலிடமும் டி.பவித்திரன், எஸ்.ஆதித்யா, எம்.எஸ்.புவனேஸ்வரன், ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றனர். கட்டாபிரிவில் எஸ். இனியா, வி.திவ்யபாரதி, பி.அகிலேஷ். ஆகியோர் முதலிடமும், எஸ்.கெளதம்ராஜ், ஆர்.முகேஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கோஜரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி நிறுவனர். சென்சாய் வி.ரெங்கநாதன். கராத்தே பயிற்சியாளர் ஆர் ஷர்மா, ராமலிங்கம், டீம் மேனேஜர்,அன்பு ராணி, சிலம்ப ஆசான் மகாகுரு,சிகாமணி ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக