விழுப்புரம், ஜூலை 25 -
இந்த ஓடை, ஏந்தூர் ஏரியில் இருந்து உபரிநீரை எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் நீரோட்டம் அதிகரித்து, தெருவுக்கும் பிரதான சாலைக்கும் இடையே நீர் தேங்கி நிற்பதால், மக்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை (25.07.2025), திரு. மேரி என்ற மூதாட்டி, இந்த ஓடையை கடக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள பிரம்மதேசம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அளித்தும், இந்த ஓடையில் ஒரு சிறிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பகுதி மக்களின் வேதனை.
பொதுமக்கள், தங்களது தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வாக இந்த ஓடையில் பாலம் அமைக்க ஒன்றிய ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
🖊 – அருள்.சி - செய்தியாளர்
%20(1).jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக