பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 2024-25ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செந்தில் தலைமை தாங்கினார். பள்ளி முதுநிலை ஆசிரியர் தண்டபாணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நிர்வாகிகள் தாஸ், லிங்கமூர்த்தி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயலாளர் இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது கல்வி செல்வத்தை யாராலும் திருட முடியாத செல்வம். பள்ளி பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதால் அரசு மூலம் கல்வி ஊக்க தொகை, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 இடஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் வழங்க படுகிறது. இதன்மூலம் குறைந்த செலவில் உயர்கல்வி பெற முடியும். எனவே கற்பதை முழுமையாக கற்று அதன்மூலம் வளமான எதிர்காலத்தை வளமானதாக மாற்றி கொள்ள வேண்டும். பெற்றோர்களை ஆசிரியர்களை மதித்து நடப்பது நல்ல பண்புகளையும், உயர்ந்த இடத்தையும் பெற்று தரும் என்றார்.
பந்தலூர் வன சரகர் சஞ்சீவி பேசும்போது லட்சியத்துடன் படித்தால் உயர்ந்த இடம் பெற முடியும். பல்வேறு தலைவர்கள் கல்வியால் உயர்ந்து உள்ளதை கடந்த கால வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. எனவே மாணவ பருவத்தில் கவணங்களை சிதறவிடாமல், பெற்றோர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர கல்வி மிக அவசியம். மதிப்பெண் எடுக்க வேண்டும் என மணபடம் செய்து படிப்பதை தவிர்த்து புரிந்து படிக்க வேண்டும். இதன்மூலம் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும். மேலும் இதர திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும். என்றார்.
தொடர்ந்து கடந்த பொதுத்தேர்வு நடைபெற்றதில் 10 ம் வகுப்பில்
முதல் மதிப்பெண் பெற்ற
சஞ்சய் எஸ் (365), நிவேதா வி (365), இரண்டாம் மதிப்பெண் பெற்ற சுபாஷ் எஸ் (351), மூன்றாம் மதிப்பெண் பெற்ற பிரசாந்த் ஜி (349) ஆகியோருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடம் பிடித்த சுமித்திரா (518) கலை பிரிவு பாத்திமாத்து ரிஃப்னா (518) அறிவியல் பிரிவு இரண்டாம் இடம் பிடித்த உஷா தேவி எம் (511) கலைபிரிவு மூன்றாம் இடம் பிடித்த தீபிகா ஆர் (492) கலைபிரிவு ஆகியோருக்கும் கேடயம் மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக