பண்ருட்டியில் பூட்டிய வீட்டில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்த நிலையில் 5 மணி நேரம் காத்திருந்து பூட்டை உடைத்து பறிமுதல் செய்த அதிகாரிகள்!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஜூலை, 2025

பண்ருட்டியில் பூட்டிய வீட்டில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்த நிலையில் 5 மணி நேரம் காத்திருந்து பூட்டை உடைத்து பறிமுதல் செய்த அதிகாரிகள்!.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்துக்கு உட்பட்ட அவுலியா தர்கா அங்காளம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரேஷன் பொருள்களை பொதுமக்களிடம் இருந்து வாங்கி அதனை குமரன் நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது பேரில் குமரன் நகர் பகுதியில்  அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.


அப்பொழுது பூட்டிய வீட்டில்ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வீட்டை திறக்க யாரும் முன் வராததால் 5 மணி நேரம் காத்திருந்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் மற்றும்  நுண்ணறிவு பிரிவு பாண்டியன் கிராம அலுவலர்கள் தலைமையில் வீட்டில் பூட்டை உடைத்து பார்த்தபோது அங்கு 1200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கோதுமை 120 கிலோ பதுக்கி வைத்ததை கண்டுபிடித்து அதனை கைப்பற்றி மாவட்ட  உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


பண்ருட்டி பகுதியில் பூட்டிய வீட்டில் ரேஷன் பொருள்கள் பதிக்க வைத்த நிலையில் 5 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் பூட்டை உடைத்து ரேஷன் பொருள்களை பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad