திமுகவில் சேர மக்கள் ஆர்வம்; அமைச்சர் முத்துசாமி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஜூலை, 2025

திமுகவில் சேர மக்கள் ஆர்வம்; அமைச்சர் முத்துசாமி



ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்டத்தில் திமுகவில் சேர மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.


ஈரோட்டில் பல்வேறு இடங்களில் சாலை பணிகளை அவர் இன்று (ஜூலை 10) துவக்கி வைத்தார்.


அப்போது கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்ட பிரிவில் உள்ள 816 பூத்துகளில் வீட்டுக்கு வீடு சென்று அரசின் சாதனை விளக்க புத்தகங்கள் வழங்கும் பணி 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது வரை திமுக தொண்டர்கள் சென்றுள்ள வீடுகளில் திமுகவில் சேர்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது போல் காட்டுகிறார். ஆனால் நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்கின்றனர். அவர் கோவில் பணத்தை எடுத்து எப்படி கல்லூரியில் கட்டலாம் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பெற்றோர்களே எதிர்ப்பு

தெரிவித்துள்ளனர். அதுவே அவருக்கு அளிக்கும் விடையாகும். தமிழக அரசு ஈரோடு மாநகராட்சிக்கு ரூபாய் 100 கோடி கான்கிரீட் சாலை தார் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் ஏற்படுத்த ஒதுக்கி உள்ளது. அதில் தற்போது வரை சுமார் 53 கோடி மதிப்பிலான பணிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் தார் சாலைகள் மற்றும் சாக்கடை வசதிகள் ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். 


மக்களின் தேவைக்கேற்ப சிறிய பகுதிகளில் கூட கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையர் ஹர்பித் ஜெயின் கலெக்டர் எஸ் கந்தசாமி மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் மற்றும் பல உயரதிகாரிகள் நிகழ்ச்சிகளில் கலந்து

கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்தியாளர் 

ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad