ஈரோட்டில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் கல்லூரி சந்தையை மாவட்ட கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார். ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை, மாணவர்களின் மத்தியில் கொண்டு சென்று பிரபலமாக்கும் வகையிலும், வணிக மேலாண்மை பயிலும் மாணவர்களின் திறனை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் கல்லூரி சந்தை கண்காட்சி, ரங்கம்பாளையத்திலுள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இச்சந்தை நாளை (11ம் தேதி) வரை நடைபெறுகிறது. சந்தையில் சுமார் 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
செ.கோபால், ஈரோடு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக