செம்பனார்கோவிலில் மக்கள் மசோதா கட்சியில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் சேர்க்கை – தலைவர் மாயா வெங்கடேசன் உரை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

செம்பனார்கோவிலில் மக்கள் மசோதா கட்சியில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் சேர்க்கை – தலைவர் மாயா வெங்கடேசன் உரை.


மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் உள்ள பரசலூரில் அமைந்துள்ள மக்கள் மசோதா கட்சி தலைமை அலுவலகத்தில், கடந்த 7 மாதங்களில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற கட்சியில் ஒரு நாளில் 2000க்கும் மேற்பட்டோர், அதிலும் பெரும்பான்மையாக பெண்கள், இணைந்த அதிரடி விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னதாக, கட்சி சார்பில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுப்பினர் சேர்க்கை ஊர்வலமாக ஆரம்பமானது. பிறகு, புதிய உறுப்பினர்கள் அனைவரும் செம்பனார்கோவில் பரசலூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தை வந்தடைந்து, அங்கு நடைபெற்ற விழாவில் தலைவர் டாக்டர் மாயா வெங்கடேசன் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.


இந்த விழாவில், பொதுச் செயலாளர் RKV ரூபன், மாநில ஒருங்கிணைப்பாளர் P. பிரகாஷ், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் ஆறுபாதி A.S. சபரிநாத், தஞ்சை மண்டல செயலாளர் ஜோதிபாஸ், மாவட்ட பொருளாளர் முரளி, செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பூகடை சதீஷ், இளைஞரணி ஒன்றிய செயலாளர் பகத்சிங், திருச்செம்பள்ளி ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.


முன்னதாக, கட்சித் தலைவர் டாக்டர் மாயா வெங்கடேசனுக்கு, கட்சி சார்பில், பாரம்பரிய சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் அவர் சிறப்புரையாற்றி, "இணைந்த அனைவரும் சமத்துவம், சமூக நீதி, மக்களின் நலன் எனும் மூன்றையும் வாழ்வியல் கோட்பாடாகக் கொண்டிருக்கும் மக்கள் மசோதா கட்சியின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வு, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பாதையில் எடுத்து வைத்த முக்கியமான அடியெடுப்பாக அமைந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad