விழுப்புரம், ஜூலை 26 -
விழுப்புரம் மாவட்டம் ஏந்தூர் கிராமத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGA) கீழ் நடைபெறும் பணிகளில் சிலர் வேலைக்கு வராமல், பெயர் மட்டும் பதிவு செய்து சம்பளம் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து ஜூலை 26 ஆம் தேதி மாவட்ட சுற்றுப் பார்வை அதிகாரிகள் நேரில் சென்று பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து அதிகாரிகள், வேலை நேரத்தைப் பதிவு செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கவும் சில முக்கிய வழிகாட்டுதல்களை தெரிவித்தனர். வேலைகளின் புகைப்படங்களை நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களுடன் பதிவு செய்யும் ஜியோ-டாகிங் முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், பணிக்காரர்கள் வருகையை மொபைல் செயலி அல்லது முகபதிவு முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மக்கள் நேரடியாக புகார் செய்யக்கூடிய அமைப்புகள் அமைய வேண்டும் என்றும், ஊராட்சி மக்கள் பங்கேற்கும் சமூக கண்காணிப்பை வழமையாக நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இவ்வாறு புகார்கள் ஏற்படுவதற்கான காரணங்களில், வேலை செய்கிறார்கள் என ஆவணத்தில் மட்டும் பதிவு செய்தல், பஞ்சாயத்து அலுவலர்களின் நெருக்கடி, வேலை வழங்குபவர்களின் அலட்சியம் மற்றும் மக்களின் வேலை செய்ய விருப்பமின்மை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த முறைகேடுகளை தவிர்த்து திட்டத்தின் உண்மை நலன்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக