திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் மறியல் போராட்டம்; 2500 தொழிலாளர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் மறியல் போராட்டம்; 2500 தொழிலாளர்கள் பங்கேற்பு.


செங்கல்பட்டு, ஜூலை 09 (ஆனி 24) -

திருத்தப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, செங்கல்பட்டில் இன்று மாபெரும் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது அகில இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு. செங்கல்பட்டு ரயில்நிலையம் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம், ராஜரத்தினம் மைதானம் வரை சென்று மத்தியில் மாபெரும் பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.


போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் பங்கேற்றனர். அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நகராட்சி பணியாளர்கள், பஸ்கள் மற்றும் மருத்துவத் துறையின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலும், தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும் வகையிலும் இருப்பதாக பேசுபவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.26,000 வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றவும், வேலை நிலைத்தன்மை மற்றும் சம ஊதியம் உறுதி ஆகியவற்றை உறுதி செய்யவும், தனியார் மயமாக்கலை கைவிடவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இந்த போராட்டத்தில் பல தொழிற்சங்க தலைவர்கள் உரையாற்றி, மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உரையாற்றினர். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, எதிர்காலத்தில் போராட்டங்கள் மேலும் தீவிரமாக நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad