மயிலாடுதுறை மாவட்டம் ஆயப்பாடியில் மறைந்தாலும் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும் மரியாதை முன்னுதாரணமாக விளங்கும் பள்ளி. இறந்த மாணவர் படிக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை அவர் தந்தையிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது
மாற்றுத்திறனாளி முன்னாள் மாணவரின் நினைவு நாள் பள்ளியில் நினைவு நிகழ்வு அந்த மாணவரின் பெயரில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி நினைவு பரிசு நினைவு நாளில் அந்த மாணவனின் தந்தை உருக்கமாக மாணவர்களிடம் பேசினார் மூன்று ஆண்டுகள் நினைவு நாளில் மரக்கன்றுகள் பள்ளியில் நடப்படுகிறது மறைந்த பிறகும் மாணவனுக்கு பள்ளி செலுத்தும் மரியாதை நெகிழ்ச்சி சம்பவம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளியில் அதே ஊரை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரின் மகன் முகமது ஜாஸிம் இவர் அதே பள்ளியில் எல்கேஜி முதல் படித்து வந்த நிலையில் இவர் ஒரு மாற்றுத் திறனாளி என்ற போதிலும் தினமும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து பள்ளியில் சிறந்த மாணவராக இருந்துள்ளார் இந்நிலையில் மாற்றுத்திறனாளி முகமது ஜாஸிம் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த மாணவராக இருந்த பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் அவரது குடும்பம் மட்டுமின்றி பள்ளியும் சோகத்தில் ஆழ்ந்தது இந்நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் அந்த மாணவனின் புகழ் இன்னும் பள்ளியில் உள்ளது மாணவனின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் முன்மாதிரி நாளாக மற்ற மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நாளாகவும் நினைவு அஞ்சலி செலுத்தும் தினமாகவும் நடைபெறுகிறது இந்நிலையில் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது இதில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இறந்த மாற்றுத்திறனாளி மாணவர் முகமது ஜாஸிம் நினைவாக கேடயம் வழங்கி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய உயிரிழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் தந்தை ஜாகிர் உசேன் தன் மகன் இறந்த பொழுதிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளிக்கு வந்து தன் மகனின் நினைவு நாளில் பங்கெடுத்து பள்ளி வளாகத்தில் ஆண்டுதோறும் மரக்கன்று நடுவதாகவும் மேலும் தன் மகன் இறந்தாலும் பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் தன் குழந்தை போல் பார்ப்பதால் உயிரிழந்த மாணவனின் நினைவு நாளில் ஊக்கப்படுத்தும் விதமாக மற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கேடயம் வழங்குவதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தன் மகன் இல்லை என்றாலும் நீங்கள் அனைவரும் முன்னேறி அதிக மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் போது அதனை பார்த்து மகிழ்வதாகவும் தன் மகனே முன்னேறுவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வெளிநாட்டில் தான் பணியில் இருந்தாலும் தன் மகனின் நினைவு நாள் அன்று மறக்காமல் மகன்படித்த பள்ளிக்கு வருவதாகவும் கூறினார் இந்நிலையில் மறைந்த மாற்றுத்திறனாளி மாணவர் முகமது ஜாஸிம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர் மேலும் தற்பொழுது பள்ளியில் படிக்கும் மற்றொரு மாற்றுத்திறனாளி மாணவி படிப்பில் சிறந்து விளங்குவதால் அவரையும் அழைத்து மேடையில் கேடயம் வழங்கி சிறப்பித்தனர், பாராட்டினர்.
மேலும் மறைந்த மாற்றுத்திறனாளி மாணவர் முகமது ஜாஸிம் நினைவு நாளை ஒட்டி அனைத்து குழந்தைகளும் ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் அப்பொழுது சக மாணவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் மௌன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது மௌன அஞ்சலியில் தற்பொழுது கடலூரில் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது மாற்றுத்திறனாளி மாணவராக இருந்து முகமது ஜாஸிம் மறைந்த பின்னும் சிறந்த மாணவர் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியதன் காரணமாக இன்றளவும் அவரது நினைவு நாளில் தனியார் பள்ளியாக இருப்பினும் அந்த பள்ளி மாணவனுக்கு மரியாதை செய்து மற்ற மாணவர்களுக்கு ஊக்கமாக இருப்பதற்கு உதவியாக உள்ளது இச்சம்பவம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்த நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர் ஆயப்பாடி முனிபுர் ரஹ்மான் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக