போக்சோ சட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் ஒருவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

போக்சோ சட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் ஒருவர் கைது


போக்சோ சட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் ஒருவர் கைது


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட நஞ்சநாடு அருகிலுள்ள நரிகுளி ஆடா என்னும் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். சுரேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன என கூறப்படுகின்றது . அப்பகுதியில் வாடகைக்கு குடி வந்திருக்கும் 16 வயது சிறுமியிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்து நிலையில் உடனடியாக விசாரணை செய்த காவல் துறையினர் இருவரையும்  கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். சிறுமிக்கு 16 வயது என்பதால் வழக்கு பதிவு செய்த போலிசார்  போக்சோ சட்டத்தில் சுரேஷ் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad