மத்திய பாஜக அரசின் கொள்கை நடவடிக்கைகளை கண்டித்து மானாமதுரை ரயில் நிலையம் முன்பாக எஸ்ஆர்எம்யூ கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பாக மானாமதுரை ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எஸ்ஆர்எம்யூ பொது செயலாளர் கண்ணையா அவர்களின் ஆணைப்படியும், ஏஐஆர்எப்-ன் முடிவின் படியும், ஜூலை 9 ம் தேதி மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான எச்எம்எஸ் உட்பட்டு அனைத்து மத்திய சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, கோட்ட செயலாளர் ஜே. எம். ரபீக் டிஎஸ்/எம்டியூ மற்றும் கோட்ட தலைவர் சி. செந்தில்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மானாமதுரை கிளையின் சார்பாக மானாமதுரை ரயில் சந்திப்பு நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார், பாலமுருகன் கிளைச் செயலாளர் முன்னிலை வகித்தார். கிளை பொறுப்பாளர் பி. சீதாராமன் ஏடிஎஸ்/எம்டியூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மகளிர் அணி, இளைஞர் அணி, கேட்டகிரி கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து சகோதர, சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக