நாடு தழுவிய வேலை நிறுத்தம் - திருச்செந்தூரில் தொழிற்சங்கத்தினர் பேரணி, சாலை மறியல் ஏராளமானோர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

நாடு தழுவிய வேலை நிறுத்தம் - திருச்செந்தூரில் தொழிற்சங்கத்தினர் பேரணி, சாலை மறியல் ஏராளமானோர் கைது.

நாடு தழுவிய வேலை நிறுத்தம் - திருச்செந்தூரில் தொழிற்சங்கத்தினர் பேரணி, சாலை மறியல் ஏராளமானோர் கைது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஒன்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 

விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியான திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு அனைத்துக் கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். 

இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சி முத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலைச் செழியன், ராவணன் , ஏஐடியுசி லோகநாதன், ஜெயக்குமார், மாரிமுத்து,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad