தாம்பரத்தில் தனியார் பள்ளியில் ராகிங் கொடுமை: எட்டாம் வகுப்பு மாணவனுக்கு எலும்பு முறிவு – பெற்றோர் கடும் கண்டனம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஜூலை, 2025

தாம்பரத்தில் தனியார் பள்ளியில் ராகிங் கொடுமை: எட்டாம் வகுப்பு மாணவனுக்கு எலும்பு முறிவு – பெற்றோர் கடும் கண்டனம்!

*மாதிரி  படம்.
தாம்பரம், ஜூலை 11 -

தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு அதே வகுப்பில் பயிலும் மூத்த மாணவர்கள் பகடிவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகடிவதையின் போது, குறித்த மாணவனை மாணவர்கள் தாக்கியதில், அவரின் இடது கை எலும்பு முறிந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரிடம் முறையிட்டுள்ளனர்.


சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பம் கடும் உளவியல்பூர்வ அதிர்வுக்கு உள்ளாகியுள்ளது. “இது போன்ற விஷயங்களை பள்ளியே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம். இன்று என் மகன் பாதிக்கப்பட்டுள்ளார், நாளை மற்ற குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது” என மாணவனின் தாயார் வேதனையுடன் தெரிவித்தார்.


மேலும், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து, மாணவர்களுக்கு மனநல ஆலோசனை (counselling) வழங்குவதுடன், பகடிவதை முற்றிலும் ஒழிக்க உறுதியுடன் செயல்பட வேண்டும் என அரசுக்கும் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad