இரண்டு மாத ஊதியத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஜூலை, 2025

இரண்டு மாத ஊதியத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டு உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்கள்  சிட்டி கிளினிங் தனியார் ஒப்பந்த அடிப்படையில்  தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர், நாள்தோறும் காலை முதல் இரவு வரை தெருக்களிலும் நகரப் பகுதியில் இருக்கக்கூடிய குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் வழங்காததால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டை முன்வைத்து இன்று தூய்மை பணிகளை நிறுத்தி கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிட்டி கிளினிக் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் இரண்டு நாட்களில் ஊதியம் வழங்கப்படும் உடனே கலைந்து செல்லுங்கள் என கூறினார், ஆனால் இதை தான் நீங்கள் ஒவ்வொரு முறையும் கூறுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை எங்களது ஒரு நாள் ஊதியம் கூட எவ்வளவு என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் மாதந்தோறும் வழங்கக்கூடிய ஊதியத்தை வைத்து தான் தங்களது வாழ்வாதாரம் உள்ளது எனவே உடனடியாக எங்களது ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஏற்கனவே சிட்டி கிளினிக் என்ற தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் கடலூர் பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad