தில்லையாடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஜூலை, 2025

தில்லையாடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி ஊராட்சியில் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது பல்வேறு அரசு துறை முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது இதில் தில்லையாடி பகுதியில் 3 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.


அதிக மக்கள் மகளிர் உரிமை தொகை வேண்டியும் முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளி உதவித்தொகை பட்டா மாறுதல் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர் அந்தந்த துறை அலுவலர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.


குறிப்பாக தில்லையாடியில் அமிர்தா நகர் தெற்கு மாரியம்மன் கோவில் கோழிக்கார தெரு வைரவர் பிள்ளையார் தெரு நாட்டு தெரு பகுதிகளுக்கு உடனடியாக சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று என அப்பகுதி மக்கள் சேர்ந்து கோரிக்கை மனுவாக அளித்தனர் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர் தில்லையாடி ஊர் முக்கியஸ்தர்கள் இணைந்து மனு அளித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad