ராதாபுரம் தொகுதி நவ்வலடி கிராமத்தில் பிறந்து 2016 – 2021 வரை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று சட்டமன்றத்தில் ராதாபுரத்தின் குரலாக ஒலித்த ஐ.எஸ்.இன்பதுரை அவர்களின் குரல் இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகிறது.
அது நம் ராதாபுரம் தொகுதி மக்களுக்கான குரலாக ஒலிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அதை நிருபிக்கும் விதமாக எம்.பியாக பதவியேற்ற முதல் நாளில் நெல்லையில் ரயில்வே கோட்டம் உருவாக்கவும் , முன்னொரு காலத்தில் கடற்கரை வழியாக ராமேஸ்வரம் வரை இருந்த ரயில் பாதையை மீண்டும் அமைக்க பாடுபடுவேன் என்று மாநிலங்களை உறுப்பினராக (M.P) பதவியேற்ற நாளில் தெரிவித்து இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக ராதாபுரம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக