மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த ராவுத்தன் வயல் ஊராட்சி மறவன்வயல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கடந்த 2022- 2023 ஆண்டு பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்ட சாலை பணியை முழுமையாக முடித்து தர மறுத்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும். மறவன் வயல் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும். மக்களின் மனுவை அலட்சியப்படுத்திய மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் நீ.லலிதா .சேதுபாவசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சேகர் ஆகியோர்தலைமையில். மாநில கல்வியாளர் அணி செயலாளர் V. ரெங்கசாமி . தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து ஜி இவர்கள் முன்னிலையில் தமிழர் தேசம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன் முத்துராஜா கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மறவன்வயல் கிராமத்தினர் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
பேராவூரணி நீலகண்டன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக