ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் களுக்கு பாராட்டு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பு!
வேலூர் , ஜுலை 8 -
வேலூர் மாவட்டம் தொழிற் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் ஒருங்கி ணைப்பு க்குழுவின் சார்பில் ஞாயிற்றுக் கிழமை ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பி முட்லுர் சிதம்பரத்தில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் ஆகஸ்ட் மாதம் கொல்கல்தாவில் நடை பெறும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய 9வதுமாநாட்டில் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்துகொண்டு அகில இந்திய 9வது மாநாட்டின் துண்டறிக்கை, சுவரொட்டி வழங்கி பணிநிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் ஜி மதியழகன் தலைமை தாங்கினார். முன்னதாக ஜி கொளஞ்சிநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலா ளர் ஜி.பாண்டியன் மாவட்ட பொருளாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் விழாஒருங்கிணை ப்பாளர்கள் வி.முத்துக்குமரன் எஸ்.சீனி வாசன்ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
2025 மே மாதம் பணி நிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் என்.ரவி, ஜி.உதயகுமார்,வைரஉமாபதிஆர்.பத்மினி ,ஜி.சீதாராமன்ஆர்.மல்லிகா பன்னாரி ஆர்.தேவநாதன், வி.ரவிச்சந்திரன், எஸ்.ஜெயஸ்ரீ, ஆர்.பாத்திமாபீவி ஆகிய ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணி வித்து கேடயம் வழங்கி பாராட்டப்பட்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் முன்னாள் மாநில பொறுப்பாளர்கள் த.பாலு, ஜெ.பாலச்சந்தர், டி.இராமமூர்த்தி, ஆர்.ராஜசேகரன், ஜி.நடராஜன் உள்ளிட் டோர் வாழ்த்தி பேசினர் தொடக்கக் கல்வித் துறையின் உதவி இயக்குனர் எஸ்.கே.ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.சீனிவாசன் அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளர் கார்மேக வண்ணன், முன்னாள் உதவி திட்ட அலுவலர் கே.ஆர்.பாரி, பட்டிமன்ற நடுவர் இரா.நவஜோதி, கு.பிரகாஷ் ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்வில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டில் தொழிற்கல்வி ஆசிரியர்கள்பங்கேற்பதற் கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்கான துண்டறிக்கையும் சுவரொட்டி யும் வெளியிடப்பட்டது.முடிவில் பண்ருட்டி எஸ். மோகன் குமார் நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக