குடியாத்தம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கண் விழி பரிசோதனையால் பொது மக்கள் சிரமம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

குடியாத்தம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கண் விழி பரிசோதனையால் பொது மக்கள் சிரமம்!

குடியாத்தம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கண் விழி பரிசோதனையால் பொது மக்கள் சிரமம்!
குடியாத்தம் , ஜூலை 8 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டா ட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைத் தீர்வு நாள் மாதா ந்திர கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாட்சியர் கி. பழனி தலைமை தாங்கி னார் தலைமையிடத்து வட்டாட்சியர் உதயகுமார் முன்னிலை வகித்தார்வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் வரவேற் றார் இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைத் தீர்வு நாள் கூட்டத் திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்குடியாத்தம் போஜனாபுரம்  உள்ளி சீவூரான்பட்டி
உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது அதை சீர் செய்ய வேண்டும் செட்டிகுப்பம் பகுதியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளி ஆத்தோரம் பட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுகிறது அதை தடுக்க வேண்டும் மோர் தானா வலதுபுற கால்வாய் துார் எடுத்து சீர் செய்ய வேண்டும் கிராமப்புறம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பணிபுரி புரியும் ஊழியர்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் குடும்ப அட்டை வைத்திருக்கும் பொது மக்களிடம் கண் விழி பரிசோதனை செய்யப்படுகிறது இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பழைய நடைமுறைபடி
கைரேகை பரிசோதனை மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள் இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் குமார் தோட்டக் கலைத் துறை அலுவலர் கோபி வருவாய் ஆய்வா ளர்கள் அசோக் குமார் புகழரசன் கார்த்தி மற்ற விவசாய பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சேகர் துறை செல்வம் பழனி வேலன் உள்ளிட்ட பல்வேறு துறை அதி காரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad