இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த வர் உயிர் போகும் நேரத்திலும் கையில் பிடித்த கொடியை கீழே விடாமல் இருந்த திருப்பூர் குமரனின் தியாகத்தையும்,சுதந்திர போராட்டத்தில் அவரது ஈடுபாட்டையும் போற்றும் வகையில்,
திருப்பூர் குமரன் அவர்களின் பெயரை, ந திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு "தியாகி திருப்பூர் குமரன் தெற்கு பேருந்து நிலையம்" என பெயர் சூட்ட ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.கஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும்,நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர் குமரன் அவர்களின் குடும்பத்தினர், மரியாதைக்குரிய திருப்பூர் மேயர் ந. தினேஷ்குமார் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மேயரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கூறினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக