விழுப்புரத்தில் மோட்டார் வாகனச் சட்டம் 1988 தீவிர அமல்; சிறார்கள் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

விழுப்புரத்தில் மோட்டார் வாகனச் சட்டம் 1988 தீவிர அமல்; சிறார்கள் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Image Source : google.com

விழுப்புரம், ஜூலை 22 –

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 199A அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 2,063 விபத்துகள் சிறார்களால் நடைபெறுவதால், இந்த நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.


பிரிவு 199Aன் கீழ், 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை, ஒரு ஆண்டுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு ரத்து, ரூ.25,000 வரை அபராதம் ஆகியவை இடம் பெறுகின்றன. விழுப்புரம் காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சட்ட விதிகளையும் கருத்தில் கொண்டு வாகனங்களை ஒப்படைக்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.


மோட்டார் வாகனச் சட்டம் 1988, இந்தியாவில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் முக்கிய சட்டமாகும். இது ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, சாலை விதிமுறைகள் மற்றும் விபத்துகளில் இழப்பீடு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், “சிறார்களின் பாதுகாப்பும், சாலையில் பயணிக்கும் பிறரின் உயிர்த் துயரமும் உங்கள் கையில் உள்ளது. தயவுசெய்து வாகனங்களை சிறார்களுக்கு ஒப்படைக்க வேண்டாம்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


- செய்தியாளர் அருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad