திண்டிவனம், ஜூலை 22 -
திண்டிவனம் நகராட்சி 19வது வார்டில், 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் தினமும் இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்வதில் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த அடிப்படை சுகாதாரத் தேவையைப் புரிந்துகொண்ட நகர தலைவர் திருமதி நிர்மலா ரவிசந்திரன் தலைமையில், புதிய கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில் நகர மன்ற உறுப்பினர்கள் திரு. ஆர்.ஆர்.எஸ். ரவிச்சந்திரன், சரவணன், சீனிராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த புதிய கழிப்பறை கட்டிடம், குறித்த பகுதிக்கான சுகாதார சீரமைப்பில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட நகராட்சி நடவடிக்கையாக இது பெருமைப்படத் தக்கதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக