மேட்டுப்பாளையம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முதல் கட்டமாக ( ஜூலை 17 முதல் 12.08.2025 வரை )!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முதல் கட்டமாக ( ஜூலை 17 முதல் 12.08.2025 வரை )!!


மேட்டுப்பாளையம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முதல் கட்டமாக  ( ஜூலை 17 முதல் 12.08.2025 வரை )!!


உங்களுடன் ஸ்டாலின் "திட்ட முகாம்" கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. அத்துடன் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புற பகுதியில் 13 அரசு துறைகளில் 43 சேவைகள் இம் முகாமில் மூலம் பொது மக்களுக்கு சென்றடைய ஏதுவாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று திட்டக்குறிப்பு விளக்கி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியை கண்காணிக்க  மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் . பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்த விவரங்கள்( Pamphlet)மற்றும் விண்ணப்ப படிவத்தை இணைத்து, முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரங்கள் படிவங்களில் குறிப்பிடப்பட்டு வீடு வீடாக பொதுமக்களுக்கு உரிய கால இடைவெளியில் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இருந்தால் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக ஜூலை (17 முதல் 12. 8.25)வரை நடைபெறுகிறது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad