மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா!!!

 


மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா!!!


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் சார்பில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில்  முதல் மதிப்பெண் பெற்ற 43 பள்ளிகளைச் சார்ந்த 130 மாணவ மாணவியர்களுக்கு 71 ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இயக்கச் செயலாளர் சி ஜெயராம் அவர்கள் வரவேற்புரை வழங்கினர். தமிழ்ச் சங்கத் தலைவர் சோலமலை ,தமிழ்ச் சங்க அறக்கட்டளை தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையிலும், எம்,  மணி ,வி ஆர் தாமோதரன், கீ.ச துரைராஜ் ,எஸ் சுப்பிரமணியம், ந. ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .தமிழ் சங்க உறுப்பினர்கள் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், என பலரும் திரளாக விழாவில் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad