காட்பாடி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் இங்குஸ் நாலேஜ் அகடாமி நிறு வனத்துடன் புத்துணர்வு ஒப்பந்தம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஜூலை, 2025

காட்பாடி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் இங்குஸ் நாலேஜ் அகடாமி நிறு வனத்துடன் புத்துணர்வு ஒப்பந்தம்!

காட்பாடி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் இங்குஸ் நாலேஜ் அகடாமி நிறு வனத்துடன் புத்துணர்வு ஒப்பந்தம்! 
காட்பாடி , ஜுலை 18 -

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் இயங்கிவரும் திருவள்ளு வர் பல்கலைக்கழகமும் சென்னையைச் சார்ந்த இங்குஸ் நாலேஜ் அகடாமி (SkillsDA)நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தா னது. திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தின் மாண்பமை துணைவேந்தர் முனை வர். த. ஆறுமுகம் முன்னிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் சென் னை இங்குஸ் நாலேஜ் அகடாமி (SkillsDA) நிறுவனமும் இணைந்து B.Voc in loT & Cyber Security பட்டப் படிப்பிற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் சார்பில் பதிவாளர் முனைவர். ஜெ.செந்தி ல்வேல் முருகன், இங்குஸ் நாலேஜ் அக டாமி (SkillsDA) நிறுவனத்தின் சார்பில் தலைமை இயக்குநர் சங்கர் விஜயன்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப் பமிட்டனர். இந்நிகழ்வில் இங்குஸ் நாலேஜ் அகடாமி நிறுவனத்தைச் சார்ந்த விஜயன்,திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சமூக வெளிப்பரப்பு மைய இயக்குநர் முனைவர். பாமா, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி இயக்குநர் முனைவர். மாதவன், கணினித்துறைத் தலைவர்முனைவர்.கவிதா, இயற்பியல் துறைத்தலைவர் முனைவர்.யுவராஜன், உயர் தொழில் நுட்பவியல் துறையின் இணைப்பேராசிரியர் முனைவர்.விஜய் ஆனந்த் உள்ளிட்ட பேராசிரியர்களும் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad