நீரின்றி ரயிலை இயக்கும் சதர்ன்ரயில் வே நிர்வாகம்!
சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகிகள் கண்காணிக்காமல் அலட்சியமாக செயல்படும் அவல நிலை!
வேலூர் , ஜுலை 18 -
சென்னை:- சென்னை சென்ட்ரலிலிருந்து மைசூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயிலில் சில ரயில் பெட்டியில் நீர் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கு
உள்ளாகி சிக்கிதாதவிக்கும் இந்த ரயில் பயணிகள், சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் பெங்களூர் மார்க்கமாக மைசூர் வரை செல்லும் இந்த ரயிலில் D5 பெட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். இதில் குழந்தைகள, கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலர் பயணிக்கும் இந்த தருணத்தில் கழிப்பறையில் முகம்சுழிக்கும் அளவில் சுத்தம் இல்லாத நிலை மற்றும் முகம் கழுவ, கை கழுவ நீரின்றி இந்த ரயிலை இயக்கியுள்ளனர் என இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் கூறி வருகின்ற னர். அதேபோன்று பெட்டிகளை சுத்தம் செய்யாமல் கழிப்பறைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே இயக்கி உள்ளதாக ரயில் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட உயர்பதவி ஊழியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளவும் இதுபோன்ற அலட்சியமாக செய ல்படும் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே நிர்வாக மேலாளர் மீது உரிய சட்ட ஒழுங் கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக