உசிலம்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஜூலை, 2025

உசிலம்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


மதுரை, ஜூலை 18 -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் M.S. தொண்டு நிறுவனத்தின் சார்பாக சிறப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு சமூகத்துறை செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


இந்நிகழ்வில் முக்கியமாக, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் டிபன் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவையெல்லாம் சமூகத்தில் பாதுகாப்பும், பசுமையும் வளர வைக்கும் செயல்கள் என்பதை M.S. தொண்டு நிறுவனம் வழியாக மக்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியுள்ளது. இத்தகைய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடைபெற வேண்டியதின் அவசியம் நிகழ்வின் மூலம் உணர்த்தப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad