நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம்!

நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம்!
திருப்பத்தூர் , ஜுலை 19 -

திருப்பத்தூரில் மாவட்டம் நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 16.6.25 முதல் திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியை கண்டித்து நீதிமன்ற புறக் கணிப்பு மற்றும் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். அதேபோல இன்றும் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர் சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட் டனர் 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சத்தியமூர்த்தி கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் ஆனால் இதுவரை எங்களை அழைத்துப் பேசவில்லை கோரிக்கை ஏற்க மறுக்கிறார்கள் 
போராட்டம் நடைபெற்ற பின்பு வழக்கறி ஞர் செல்லும் பாதை அடைத்து விட்டார் கள்.வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்குகளை வாங்க மறுக்கின்றனர்.மேலும் குற்றவாளிகளி டம் தங்களுடைய வழக்கறிஞரை மாற்றி விடுங்கள் எனவும் கூறுவதாகவும் குற்றம் சாட்டினர்.  இதுகுறித்து உயர் நீதிமன்றத் தில் புகார் கொடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad