ராதாபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு 200 லிட்டர் மதுபானத்தை தரையில் ஊற்றி அழிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

ராதாபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு 200 லிட்டர் மதுபானத்தை தரையில் ஊற்றி அழிப்பு.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு 200 லிட்டர் மதுபானத்தை தரையில் ஊற்றி அழிப்பு 

நெல்லை மாவட்டம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட உவரி , கூடங்குளம் காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டது. 

வழக்குகள் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்த சுமார் 200 லிட்டர் மதிப்புள்ள மதுவினை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் முன்னிலையில் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் மது பாட்டிலை திறந்து ஊற்றி மதுபானத்தை தரையில் கொட்டி அழித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad