காட்பாடியில் விஷம் குடித்து கூலித் தொழிலாளி பலி!
வேலூர் , ஜுலை 15 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ஜாப்ராபேட் டையை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60) கூலிதொழிலாளி, இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் வேதனையடைந்த ஏழுமலை மது பழக்கத் திற்கு அடிமையானார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏழுமலை விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக