தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டுதலின் காந்திநகர் துளிர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா!
வேலூர் , ஜுலை 15 -
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் நடைபெற்று வரும் காந்திநகர் துளிர் பள்ளியில் 15.07.2025 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா வாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு பள்ளியில் தாளாளர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
கர்ம வீரர் காமராஜரின் திருஉருவ படத்திற்கு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளியின் அறங்காவலர் வி.பழனி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரி யர் த.கனகா வரவேற்று பேசினார்.
காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவருடைய பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி நடத்த ப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர் கள் தி. தியா, ஆ. லக்ஷனா, ச.ஸ்ரீ தனிஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர் கள் பேசுகையில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் கிராமங்கள் தோறும் அனைவரும் கல்வியினை பெற வேண்டும் என்பதற் காக ஒவ்வொரு கிராமத்திலும் தொடக் கப்பள்ளியும் நடுநிலைப்பள்ளியும் தொடங்கியவர் காமராசர் என்று பேசினர்.
பள்ளி ஆசிரியர்கள் சே.சித்ரா, வெ.பாரதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக